பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



35
30. தண்டி யடிகள் நாயனார்

பார்வை யிலாமையால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு குளம் தோண்டும் தமது தொண்டை இகழ்ந்த சமணர்கள் பார்வையை யிழக்கவும், தமது பார்வை ஒளி பெறவும் பெற்ற செல்வர் தண்டியடிகளின் திருவடி என் நெஞ்சில் தழைப்பதாக.

31. மூர்க்க நாயனார்

எங்ஙனமாவது அடியார்களுக்கு உணவளிக்க வேண்டிச், சூதாட்டம் ஆடி அதனால் வந்த பொருளை அடியார்க்கு உதவிய அறிஞர் மூர்க்க நாயனாரது புகழைச் சொல்வி மகிழ்வேன்.

32. சோமாசி மாற நாயனார்

அம்பர் நகரில் வாழ்ந்தவரும், வேள்விகள் இயற்றிய மறையாளரும், ஆரூரர் காட்ட அரனாக திருவிளையாடலைக் கண்டு மகிழ்ந்தவருமான சோமாசி மாறர் நம்மை யாண்டருளுவார்.

33. சாக்கிய நாயனார்

சைவ சமயமே மெய்ச் சமயம், சிவனே மெய்த் தெய்வம் என அறிந்து, வழியில் இருந்த ஒரு லிங்கத்தை கல்லெறிந்து பூசித்த புத்தர் பிரான் சாக்கியரைத் தொழுவதே பாக்கியச் செயலாம்.

34. சிறப்புலி நாயனார்

ஆக்கூரிலே வேதியர் குலத்திற் பிறந்து அடியார்களுக்கு வேண்டியவற்றை அளித்த வள்ளலாய்ப், பல