உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38

கையைத் தடிந்து அந்த அடியாரின் பாதத்தைத் தாமே விளக்கிய தூயராம் கலிக்கம்பர் பாதத்தைத் தொழுது வாழ்த்துவாம்.

43. கலிய நாயனார்

தீபத்துக்கு எண்ணெய் இல்லாமையைக் கண்டு 'என் இரத்தத்தை ஊற்றி விளக்கை ஏற்றுவேன்' என்று தம் கழுத்தை அறுத்துக் கொள்ளும் போது ஈசனார் திருக்கரத்தால் தடை செய்யப்பட்டு அவரது அருளைப் பெற்ற தரும நிலைராம் கலிய நாயனாரது பாதமலருக்கு அன்பு செய்வாம்.

44. சத்தி நாயனார்

சிவனடியவரை இகழ்பவரது நாவைத் துடிதுடித்து அறுக்கும் தொண்டினைப் பூண்ட சத்தி நாயனாரின் திருவடியே அடியேனுக்குக் காப்பு ஆகும்.

45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

சிவ ஸ்தலங்களைத் தரிசித்து அன்புடன் வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் கழலகளை நாடுவாம்.

46. கணம்புல்ல நாயனார்

விளக்கேற்றுந் தொண்டுக்கு முட்டு வாராத வண்ணம் தமது முடியையே விளக்காக ஏற்றி எரித்த பக்தர் கணம்புல்லரின் திருக்கோலத்தைத் துதிப்பாம்.