பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



39
47. காரி நாயனார்

தமிழ்க் கோவை பாடி அரசர் பாற் சொல்லிப் பெற்ற நிதியைச் சிவ பணிக்காக்கிய காரி நாயனாரின் கழல்களைச் சிந்தித்துக் களிப்பாம்.

48. நெடுமாற நாயனார்

சம்பந்தப் பெருமானால் திருநீறிடப் பெற்றுச் சைவரான சீர்கொண்ட நெடுமாறரது அழியாப் புகழைப் போற்றி வாழ்வாம்.

49. வாயிலார் நாயனார்

இறைவர் வீற்றிருக்கத் தம் மனத்தையே கோயிலாக ஆக்கித் தமது அன்பையே அவருக்கு நிவேதனம் செய்த வாயிலார் நாயனாரின் அடிகளை வாழ்த்துவாம்.

50. முனையடுவார் நாயனார்

போரில் வெல்ல மாட்டாதார் பொருட்டுப் போர் முனைக்குத் தாமே சென்று வென்று அகனால் வரும் நிதித் திரளைச் சிவனடியார்களுக்கு அளித்த திறமை வாய்ந்த முனையடுவாரின் புகழைப் பேசுவாம்.

51. கழற் சிங்க நாயnaar

சிவபிராற்குரிய பூவை எடுத்தாள் இவள் என்று கோபித்துத் தம் மனைவியின் கரத்தை வெட்டிய சீலர் கழற் சிங்கரை என்றும் சிந்தையில் வைப்பாம்.

52. இடங்கழி நாயனார்

சிவனடியார்களுக்கு அளிக்கும் பொருட்டு உமது நெல்லைக் கவர்ந்தேன் என்று ஒரு அடியவர் கூறக்-