பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42


தோன்றிய ஜோதியிற் கலந்தவருமான திரு நீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் கழல்களைப் பணிதலே குணமாம்.

61. சடைய நாயனார்

நம்பி யாரூரரை மகவாகப் பெற்ற சடைய நாயனாரை நாடுவாம்.

62. இசை ஞானியார்

நம்பி யாரூரருக்கு அன்னையார் என்னும் புகழ் பெற்ற இசை ஞானியாரின் புகழை என் உள்ளம் என்றும் நாடும்.

63. சுந்தரமூர்த்தி நாயனார்

திருக் கயிலையிற் சிவபிரான் கண்ணாடியிற் பார்த்து 'வாராய்' என அழைக்க வந்தவர் யார் ?

கயிலையிற் பெண்களின் மீது காதலுற்ற காரணத்தால் பூமியில் திரு நாவலூரில் வந்து பிறந்தவர் யார் ?

ஆதிசைவர் குலத்தில் வந்துதித்த மேன்மையர் யார்? ஆரூரா என்னும் திருநாமம் பெற்றவர் யார்?

நரசிங்க முனையரால் அன்புடன். ஆதரிக்கப் பட்டவர் யார்?

தமது திருமணத்தில் சிவனே வலிய வந்து 'இந்த மாப்பிள்ளை என் அடிமை எனக கூறி. ஆட்கொள்ளப் பெற்றவர் யார்?

'வன்றொண்டா' எனப் பிரானார் அழைத்ததனால் பித்தா எனப்