பாடத் தொடங்கு என்று உரைக்க அங்கம் சிலிர்த்து அவ்வாறே பதிகம் தொடங்கிப் பாடினவர் யார்?
தல யாத்திசையில், சித்தவட மடத்தில் தூங்கும் போது சிவபிரானல் தலைமிசை மிதிக்கப் பட்டவர் யார் ?
அண்ணல் அருளால் ஆரூரில் பசவையை மணந்தவர் யார் ?
திருத் தொண்டத் தொகை பாடிச் சைவ நெறியை எங்கும் தழைப்பித்தவர் யார்?
குண்டையூரில் உள்ள நெல் மலையைத் திருவாரூருக்கு வந்து சேரும்படி செய்த தவத்தினர் யார்?
கோட்புலியாரின் நட்புக் கிணங்கி அவரது அருமை மக்களாம் சிங்கடி, வனப்பகை என்பவரைத் தமது மக்களாக ஏற்றவர் யார் ?
பதிகப் பயனாய், செங்கற்கள் பொன் கற்களாக மாறப் பெற்றவர் யார் ?
இறைவாரால் கூடலையாற்றுாருக்கு வழி காட்டப் பெற்றவர் யார் ?
திருமுதுகுன்றில் (விருத்தாசலத்தில்) ஆற்றில் இட்டபொன்னைத் திருவாரூரிற் குளத்தில் வரப்பெற்றுப் பாவையை மகிழ்வித்தவர் யார் ?
குருகாவூருக்கு அருகில் இறைவனே பொதி சோறு தரப் பெற்றவர் யார் ?
திருக்கச்சூரில் இறைவனே பிச்சை யெடுத்து அன்னம் கொண்டுவந்து தரப் பெற்றவர் யார் ?