உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



45


முதலையுண்ட பிள்ளை உயிர் பெற்றெழும்படி பதிகம் பாடிய தவ முதல்வர் யார் ?

வெள்ளை யானையின் மீதேறிக் கயிலை சார்ந்த. அந்தணர் யார்?

தம்மை பிரிந்திருக்க ஆற்றாது குதிரை மீதேறிக் கயிலைக்கு வந்த சோர்பிரானைச் சிவசனந்நிதியிற் கொண்டு சேர்த்து அங்கு அவருடன் அங்கே தரிசித்து நின்றவர் யார்?

அவரே என் துணை, அவரே என்பொருள், அவரே என் உயிர், அவரே என் உண்மணியாய் நின்று உள்ளத் தொளிபெருக்கும் கண்மணியாம் சுந்தரர் என்க.

63A. தொகை அடியார்

(1) தில்லை வாழந்தணர், (2) பொய்யடிமையில்லாத புலவர் (3) பத்தராய்ப் பணிகின்ற பண்பர் (4) பரமனையே பாடுகின்ற பான்மையாளர் (5) சித்தத்தைச் சிவன் பாலே சேர்ப்பவர் (6) திருவாரூர்ப் பிறந்தார்கள் (7) முப்போதும் திருமேனி தீண்டுவார் (8) முழுநீறு பூசிய முநிவர் (9) அப்பாலும் அடிச் சார்ந்த அடியார் -ஆகிய இவர்களின் பாத மலர்கள் போற்றி.

63B. போற்றியுரை

நம்பி யாண்டார் நம்பி, சேக்கிழார் பெருமான் இவர்தம் திருத்தாள்கள் போற்றி, அரன் திருப்புகழ் போற்றி.