பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்சிற்றம்பலம்
அறுபத்து மூவர் துதிப்பா
காப்பு

திருவார் அறுபத்து மூவர் சிறப்பதைச் சிந்தை செய்தே
மருவார் மலரன்ன பாமாலை சாத்த வருந்துணையாம்
ஒருவா ரணமுகத் தானை அமரில் உடன்நடர்த்த
பெருவா சண்முகப் பாசாங் குசத்தான் பேரருளே.

நூல்
1. திருநீலகண்ட நாயனார்

ஒரு 'நீல கண்டம்' எனுமாணையி லுற்ற அன்பால்
மருநீல கண்ணி தனைநீத்து மறைக்க ஒட்டில்
வரு நீதி யாலே இளமைப்பரு வத்தை யுற்ற
திருநீலகண்டர் திருத்தாளினை சிந்தை செய்வாம்.

2. இயற்பகை நாயனார்

இல்லை யென்ற சொல் இல்லை யெனும்படி
★இல்லை ஈயெனும் எம்பெரு மானுக்கே
நல்ல கன்மனை யாளையே நல்கிய
★★எல்லி யற்பகை ஏந்தலே ஏத்துவாம்.


★இல்- மனையாள். ★ எல் - பெருமை.