பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நீங்கார். இவ்விருவருள்ளே தும்பால் அன்பினல் அணி உராய் வாழும் உரிமையுடையார் யாவர் ? சொல்வி தாக எ-று. என்றும் நும் திருவருள் வண்ணமாய்த் திகழும் திருநீற்றிகுேடு, ஊழிக் காலமாகிய கால முடிவிலே இறந்தொழித்த பிரம விட்டுணுக்களின் எலும்பினையும் ஒப்ப அணியும் இயல்புடையீராதலின், நும்முடன் பிரிப்பின் நித் திகழும் உரிமையுடைய குலமகளாராகிய உமாதேவியாரோடு இடைக்காலத்தே வந்தடைந்த சல மகளாகிய கங்ைைகயையும் ஒப்ப வைத்துப் போற்று கின்றீர் என்பதனை யாம் குறிப்பினுல் உணர்வோம் என்பார் தவள நீறு என்பு அணிவீர்” என அழைத்தார். தவளம் - வெண்மை. குலமகள், சலமகள் என்பன முறையே உமா தேவியாரையும் கங்கையையும் உணர்த்தி நின்றன. இவ்விரண்டும் முறையே குலப் பெண், வஞ்சனையுடைய பெண் என வேருெரு பொரு ளுந் தந்து முரண்பட நின்றமை காண்க. சலம் - நீர், வஞ்சனை. ஆர்வல்லார் காண அரனவனே யன் பென்னும் போர்வை யதனுலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி லுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து. (96) இ - ள் : அரன் என்னும் திருநாமமுடைய இறை வனே அன்பாகிய போர்வையினுலே போர்த்து அவனது பொருள் சேர் புகழைப்பாடிப் போற்றவல்லோம் என்ற உரிமை காரணமாக அவனடியார்களாகிய நாமும் அப் பெருமானே அயலவர் அதியாத வண்ணம் நமது மன மாகிய தனியிடத்திலே மறைவாக அடைத்துவைத்துப்