86
பெருந்தீப் பிழம்பு முழுவதையும் இறுகச்செறித்துக் கையினாற் பொறுக்கு மியல்புடையதாக்கி நின் திருத் கரத்தில் ஏந்திக் கொண்டனையோ? எ-று.
அழலாட வங்கை சிவந்ததோ வங்கை
அழகால் அழல் சிவந்த வாறே — கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க வனலேந்தித்
தீயாடு வாயிதனைச் செப்பு.
(98)
இ-ள்: பேய்கள் ஆடுகின்ற காட்டினிடமாகத் தீயின் நடுவே நின்று, ஒளிவிளங்குந்தீயினைக் கையிலேந்தி வீரக்கழல் ஒலிக்க ஆடவல்ல பெருமானே, நினது அழகிய கையானது இடைவிடாது தீயினையேந் திப் பழகின மையால் செம்மை நிறமுற்றதோ? அல்லது நின் திருக்கரத்தின் அழகினைப் பொருத்தினமையால் அந்நெருப்புத்தான் செம்மை நிறத்தைப் பெற்றதோ? இதனைத் தெளிவாகக் கூறுவாயாக. எ-று.
ஆடுதல் — பொருந்திப் பழகுதல். இறைவன் தீவண்ணனாகத் திகழும் திருமேனிப் பொலிவினை அம்மையார் புனைந்து போற்றியவாறு.
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ — செப்பெனக் கொன்
றாகத்தா னங்காந் தனலுமிழு மைவாய்
நாகத்தா யாடுன் னடம்.
(99)
இ-ள்: வாயைத் திறந்து திப்போலும் நஞ்சினையுமிழும் ஐந்தலை நாகத்தினை நின் திருமேனியில் அணிந்துள்ள பெருமானே,ஆடுகின்ற நினது திருக்கூத்து, செப்பினை யொத்துத் தோன்றும் கொங்கை