87
யினையுடைய உமாதேவியார்கண்டு மகிழ்தற்பொருட்டு நிகழ்வதோ? அன்றி நின்னைச் சூழ்ந்து போற்றும் பேய்க் கணங்களாகிய அவை கண்டு மகிழ்தற் பொருட்டு நிகழ்வதோ? இவ்விரண்டுள் இதுவென எனக்கு ஒரு தலையாகச் சொல்வாயாக. எ-று.
பேய்க்கணம் சூழ்ந்து காண ஆடுதல் உலகினை ஒடுக்குதற் பொருட்டெனவும், உமையம்மை காண ஆடுதல் ஒடுங்கிய உலகினை மீளத் தோற்றுவித்தற் பொருட்டெனவும் குறிப்பான் விளக்குவார் ‘தீப்படு காட்டு அப்பேய்க்கணம்’ என்றும் ‘செப்பேந்திள முலையாள்’ என்றும் அடை கொடுத்தோதினார்.
நடக்கிற் படிநடுங்கு நோக்கிற் றிசைவேம்
இடிக்கி னுலகனைத்து மேங்கும் — அடுக்கற்
பொருமேறோ வானேறோ பொன்னொப்பாய் நின்னே
றுருமேறோ வொன்றா வுரை.
(100)
இ-ள்: பொன்னிறம்வாய்ந்த திருமேனியையுடைய இறைவனே, நினது ஊர்தியாகிய இடபம் நிலத்தின் மேல் மெதுவாக நடந்துசென்றாலும் அதனைப்பொறுக்க லாற்றாது பூமி நிலைகுலைந்து அதிரும். அவ்வூர்தி
சினந்து நோக்குமானால் அப்பார்வையினால் திசைகளிலுள்ளன யாவும் வெந்தழியும். உரத்துக் கனைக்குமானால் அவ்வொலியினால் எல்லா வுலகங்களும் அஞ்கியேங்கும். ஆதலால் நின் ஊர்தியாகிய அது மலையொடு போர்செய்ய வல்ல மதயானையோ? இடயேறோ? அல்லது ஆனேறாகிய இடபந்தானோ? இவற்றுள் இதுவென உறுதியாகச் சொல்வாயாக. எ-று.