பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இருவர். "தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் பொய்யா மொழியை மெய்ம்மை யாக்கியவர் இவரே. புகழொடு தோன்றுவது எவ்வாறு? என்பது ஐயம். அரும்பாம் அளவில் உள் பொதிந்துள்ள மணம் மலராம் அளவில் வெளிப்படுகின்றது. இளமையில் பிறக்கும்போது உள்ளடங்கிய புகழ் நாளடைவில் பின் வாழ்க்கையில் வெளிப்படும், இதனைத்தான் கருவில் ஊறிய திரு என்பர். இம்முறையில் புகழொடு தோன்றிப் புகழொடு வாழ்பவர் இவரே. கலைமகள் நாட்டம் நகராமலேயில் வித்வான் நா. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ்ப் படிப்புக் கென ஒரு குருகுலம் வைத்து நடத்தினர். அங்குப் படித்தவர்களில் நானும் ஒருவன். அப்போது பிள்ளையவர்களும் என்னுடன் படிக்க முன்வந்தார். தந்தை யார்க்கு மேலும் படிக்க வைக்கப் பிரியமில்லை, இருந்தாலும் ஒய்ந்த நேரத்தில் படிக்கிற அளவுக்கு அனுமதி கிடைத்தது. இரண்டொரு ஆண்டு முடிந்தது. நான் சிதம்பரம் மீனாட்சித் தமிழ்க் கல்லூரிக்குத் தமிழ் படிக்க வந்தேன். தந்தையர் அவரை அனுப்பவில்லை. படிப்பிற்குத் தடைய யிருக்கிறாரே என்று தந்தைமீது சிறிது வெறுப்புத்தான். நான் மட்டும் படிக்க வந்துவிட்டேன். கலைமகள் நாட்டம் கிடைத்தது. தந்தையார்க்கு மனதில் மாற்றமும் ஏற்பட்டது. மீண்டும் அனுமதி பெற்றுச் சிதம்பரத்தில் வித்துவான் சோழவந்தான் கந்தசாமியார் அவர்க ளிடம் புகுமுக வகுப்பு (என்ட்ரன்ஸ்) படித்தார். தந்தையார்க்கு மனமில்லாமலே படித்துவந்தார். இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துணைப்