பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv பெரியப்பாவிடம் பொதுமை அன்புமட்டும் உடையவர். தொண்டு மனப்பான்மை இருந்ததன்றிச் சொந்தம் பாராட்டுவதில்லை. உள்ளத்தளவில் அவரும் பிள்ளையவர்களிடம் அன்பு வைத்திருந்தாரோ அறியோம். பெரியதந்தையார்க்கு உடல் நிலை குன்றிவந்தது. நிலையாத தன்மையை அடையும் அந்தக்காலத்தில் குஞ்சிதபாதத்தை வரவழைக்கவேண்டுமெனத் தன் மனைவியிடம் மறைமுகமாக உணர்த்தினர். இச்செயல் யாருக்கும் வியப்பைத் தந்தது. அவன் வெளியூரிலே வேலை பார்க்கிறான் என்றார்கள். தந்தி அனுப்பி வரவழைக்கத் தூண்டினர். வேலையை உதறிவிட்டு அன்று முதல் வளர்ப்புப் பிள்ளையானார் . ஆகூழ் முந்திற்று. திருமகளின் அருளும் கிட்டிற்று. தன் சொந்த தந்தையாரின் அனுமதியின் பேரில் ஒரத்தூர் சிவசிதம்பரம்பிள்ளையின் வளர்ப்புப் பிள்ளையானார். மன அமைதியோடு இருந்தவர்க்குச் செல்வப் பெருவாழ்வு தேடிவந்தது "பரணியில் பிறந்தவர் தரணி ஆளுவார்” என்பது பொய்யாகுமா? தன் தந்தையின் துணைகொண்டு பெரியம்மாவின் சொற்படி நடந்து வந்தார். கலைமகளும், திருமகளும் அவர் இல்லத்தில் ஒன்றி வாழும் நிலை ஏற்பட்டது. சாதாரண ஆண்டில் பிறந்து சாதாரணக் குடும்பத்தில் வளர்ந்த அவருக்குக் கல்வியாலன்றிப் பொருளாலும் தனிப்பெருஞ் சிறபபு ஏற்பட்டது. கலைவாணரும், புலவரும் செல்வரும் சூழ்ந்தனர். இவரது அன்பு அடக்கம் முதலிய பண்பு களால் பெருமிதத்தை அளிக்கும் பொருளுக்கும் கல்விக்கும் பெருமை கிடைத்தது, 'பெறலரும் திருப்பெற்றபின் சிந்தனை பிறிதாம் என்பதும் செல்வம் வந்துற்றகாலை தெய்வமும் சிறிது பேணார்’ என்பதும் உலகியல் வழக்கு. மலைபோல் செல்வம் வந்தாலும்,