பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


wi வரவழைத்து அரிய பெரிய கருத்துக்களைக் கேட்டுத் துய்ப்பார். தமிழை அவர் மறந்தாலும் அவ்ர் "நா’ மறந்ததில்லை. சிவபூசை செய்யும் தவநெறிக்குள் செலுத்தியவரரும் அவரே கல்விக்கு வழித்துணையாயிருந்த அவரே சிவநெறி பெறும் அருஞ் செல்வத்துக்கும் துணையாயிருந்தார். எத்தகையவர்க்கும் வாழ்க்கை வண்டியில் திருப்புக் கருவியாக ஓர் அறிவுடைச் சான்றோன் தேவை. இவ்வகையில் இவர்க்குத் துணையாய் விளங்கியவர்கள் R. P. சேதுப்பிள்ளே, சுவாமி விபுலாநந்தர், கா. சுப்பிரமணியபிள்ளை M. A. M. ப. காஞ்சீபுரம் முத்து. சு. மாணிக்க வாசகத் தம்பிரான், திருப்பராய்த்துறை சித்பவானந்த சுவாமிகள் முதலியோர் ஆவர். வித்துவான் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் உயர்திரு. க. வெள்ளைவாரணணார் அவர்கள் தமிழ் சமயத்துறையிலும் ஆர்வம் ஊட்டுபவர். மாணவ நிலையிலிருந்த நட்பு இன்னும் மாறவில்லை. தொண்டு : பிறந்த ஊர் பொன்னங்கோயில். வளர்ந்த ஊர் சி. சாத்தமங்கலம், பெரு வாழ்வளித்த ஊர் ஒரத்தூர், உறைவிடமாகக் கொண்டதோ தில்லைப்பதி. தில்லைப்பெருமான் எல்லையிலிருந்து அவர் திருவருளைப் பெறும் நோக்குடன் அப்பதியில் ஒரு வீடு வாங்கினர் அதற்குத் திருவருளகம் என்று பெயரிட்டார். மற்றவர் போல ஆடம்பரத்திற்காகத் தில்லையில் தங்கவில்லை. மனிதப்பிறவி எடுத்தது தில்லைத் தரிசனத் திற்காகவே என்ற நாவரசர் வழியில் நடப்பவர். செல் வத்துப் பயன் ஈதலே என்பதுணர்ந்து இல்லோர்க்கு ஈந்தும். இறைபணி, தமிழ்ப்பணி புரிந்தும், புலவர்களைப் போற்றியும், செழுங்கிளை தாங்கியும் செல்வத்திற்கே பெருமை தந்துள்ளார். ஒரத்தூர். பரதூர், சிதம்பரம் முதலிய தலங்களில் சிவபூசை கட்டளை முன்னோர்