உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
உரத்தூர், சிவபூசைச் செல்வர்
குஞ்சித பாதம் பிள்ளை அவர்களின் மணிவிழா

வ ழ் த் து ப் ப ஞ் ச ர த் தி ன ம்

1. “பொன்னம் பலத்தின் மேற்பாலாம்
       பொன்னங் கோயிற் பழங்குடியின்

    மன்னும் வேளாண் குலமரபன் ;
        வாழ்கோத் திரவஞ் சரமுடையான் ;

    பன்னும் அரங்க நாதன் பால்,
        பராவு சுப்ர மணியனவன்,

    பின்னோன் சீனி வாசனெனப்,
        பிறங்கும் இருவர் பிறந்தனரே.”

2. ”மூத்தோன் சுப்பிர மணியனவன்,
        முத்தீக் கையுமுறை பெற்றரனை

    ஏத்தும் பூசை செய்பலனால்
         எழில்சேர் சிவசி தம்பரமும்

    கூத்தன் அருளார் சுந்தரமும்
         குலவப் பிறந்தார் இளையவற்கே

    பூத்தார், முத்துக் குமரானொடும்
         புலவர் குஞ்சித பாதமுமே.”

3. ”உரத்தூர் வாழ்சிவ சிதம்பரனும்
         உத்த மற்கே யபிமானன் ;