உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


காரைக்காலம்மையார்
அருளிச் செய்த


அற்புதத் திருவந்தாதி



திருச்சிற்றம்பலம்

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர். (1)


இ-ள்: (நீல) நிறமுடையதாய் விளங்கும் நஞ்சக்கறை தங்கிய திருமிடற்றினேயுடைய தேவர்பிரானே, (எளியேன் இவ்வுலகில் மகவாய்ப்) பிறந்து மொழியினைப் பயின்று பேசத்தொடங்கியகாலம் முதற்கொண்டு (இறைவனுகிய நின்பால்) அன்பினாற் சிறந்து நின் திருவடிகளேயே (மனமொழிமெய்களால்) இடைவிடாது எண்ணிப்போற்றி வழிபடுகின்றேன். எனது (பிறவித்) துன்பத்தைத் தீர்த்தருள்வது எப்போது? எ-று,

காரைக் காலம்மையார் மணலாற் சிறுவீடு கட்டி விளையாடும் தம் இளம்பருவத்திலேயே சிவபெருமான் திருவடிகளுக்குத் தொண்டுபட்டொழுகும் பேரன்