பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


2


புடைய ராய் இறைவனது பொருள் சேர் புகழாகிய திருவார்த்தைகளைப் பேசும் பயிற்சி பெற்றிருந்த செய்தியை "வண்டல் பயில்வன வெல்லாம் வளர் மதியம் புனைந்தசடை, அண்டர் பிரான் திருவார்த்தையணைய வருவன பயின்று, (காரைக்காலம்மையார் புராணம் 5)என வரும் தொடரில் ஆசிரியர் சேக்கிழார் தெளிவாக் குறித்துள்ளார். சேர்தல் - மனமொழிமெய் களாகிய முக்கரணங்களாலும் அடைதல், மை - கருமை; ஈண்டு நஞ்சக்கறையினை யுணர்த்தியது. ஞாலுதல்-தொங்குதல், தங்குதல் என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டது.

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரு நெறிபணியா ரேனும் -சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு. (2)

இ-ள் : (இறைவர்) எனக்கு நேரும் இடையூறுகளை நீக்காராயினும் (யாம் படும் துயர் கண்டு) எம்பொருட்டுத் திருவுளம் இரங்கியருளாராயினும் (யாம்) உள்ளத்தால் நினைந்து கடைப் பிடித்தற்குரிய நல்வழி இதுவென எமக்குக் காட்டியருளாராயினும், ஒளியுருவில் என்புமாலை விலகாது விளங்கும் திருக் கோலத்துடன், ஆடல் புரிந்தருளவல்ல எம்பெருமானாரும் எனது நெஞ்சத்தில் எக்காலத்தும் நீங்காது எழுந்தருளியிருப்பவரும் ஆகிய அவர் பால் யான் வைத்துள்ள அன்பு ஒருபொழுதும் குறையாது-எ-று.

இனி எம்மானாராகிய அவர்க்கு என் நெஞ்சு அன்பு அறாது என இயைத்துரைத்தலும் ஆம், படர்தல் - நினைத்தல், செல்லுதல்,