3
அவர்க்கே யெழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவ தல்லாற்-பவர்ச் சடைமேற்
பாகாப்போழ் சூடு மவர்க்கல்லான் மற்ருெருவர்க்
காகாப் போம் எஞ்ஞான்றும் ஆள்.
(3)
இ.ள் : (என் நெஞ்சத்தவராகிய) அவ்விறைவர்க்கே எழுமை எழு பிறப்பும் ஆட்செய்வோம். தாம் எக்காலத்தும் அவர்க்கே அன்பு செய்வதோடல்லாமல், கொடிபோல் விரிந்து படர்ந்த சடையின்மேல் (ஒருவராற்) பகுக்கப்படாத பிறைத் துண்டத்தைச் சூடிய அவ்விறைவர்க்கல்லால் எக்காலத்தும் வேறொரு வர்க்கும் ஆளாகமாட்டோம். எ-று.
அவர்க்கே - மேலைத்திருப்பாட்டில் குறித்தவண்ணம் எனது நெஞ்சத்தவராகிய அவ்விறைவர்க்கே. எழுபிறப்பு - எழுவகைப் பிறப்புக்கள், பவர் -கொடி பகா என்றசொல் பாகா என முதல் நீண்டது, பகா - பகுக்கப்படாத, போழ் பிளவு, பிறைத்துண்டம் வாகனப் போழ் சூடும் என்றும் பாடம். வாகு-அழகு அவர்க் கல்லால் மற்றொருவர்க்கு ஆள் ஆகாப்போம் என இயைக்க, ஆகாப்போம் - ஆகமாட்டோம்.
ஆளானோம் அல்ல லறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேளாமை -நீளாகஞ்
செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.
(4)
இ-ள் ; நீண்டுயர்ந்த திருமேனி முழுவதும் செந்நிறமுடையோனாகித் திருமிடறு மட்டும் வேறொரு நிறமாகப் பெற்று, எங்களே அடிமை கொண்ட