பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$ வானத்தா னென்பாரு மென் கமற் றும்பர்கோன் தானத்தா னென்பாருந் தாமென் க-ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் என்னெஞ்சத் தானென் பன் யான். (6) இ~ள் : மு ற் ப ட் டெ ழு ந் த நஞ்சினையுண்டா க்கிய பேரொளியுடன் மிளிரும் திருமிடற்றையுடைய வனும் ஞானமே திருமேனியாகயுடையவனும் ஆகிய இறைவன் (நம்மனேரால் அணுக வொண்ணுத) பாவெளியில் உள்ளான் என்றும் தேவர் தலேவன் வாழும் இடமாகிய தேவருலகில் உள்ளான் என்றும் சொல்லுவார் சொல்லுக. அவ்விறைவன் (அன்பர்க்கு அருள் புரியும் நிலேயில்) எனது நெஞ்சமாகிய அணிய இடத்தில் இருக்கின் ருன் என்றே யான் துணிவாகக் கூறுவேன். எ-று. நினேப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் (திருக்குறுந்தொகை) எனவும் சி ைற வா ன் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும், உறைவான்’ (திருக்கோவையார்) எனவும் வரும் அருளுரைகள் இங்கு நினைக்கத்தக்கன. யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்-யானேயக் கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணிற்ற அம்மானுக் காளாயி னேன். (7) இ-ஸ் : ஒரு கையுடன் கூடிய விலங்காகிய அம் மதயானேயை உரித்துப் போர்த்த நெற்றிக் கண்ணனும் திருவெண்ணிறணிந்தவனும் ஆகிய