பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


6

அவ்விறைவனுக்கே யான் ஆளாயினேன். (ஆதலால்) யானே தவமுடையேன் ஆயினேன். (அப்பெருமானை இடைவிடாது எண்ணிப் போற்றுதலால்) எனது நெஞ்சமே நல்ல நெஞ்சமாயிற்று. (அவனது திருவருள் வழி நிற்றலால்) யானே பிறவித் தொடர்ச்சியை யறுத்தற்கு எண்ணும் மனவுறுதி யுடையேனாயினேன். எ.று.

ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே யாமாறு-தூய
புனற்கங்கை யேற்றானோர் பொன் வரையே போல்வான்
அனற்கங்கை யேற்றான் அருள். (8)

இ-ள் : தூய நீராகிய கங்கையைச் சடையில் ஏற்றியருளியவனும் தீயினை அழகிய கைத்தலத்தில் ஏந்தியவனும் ஆகிய இறைவனது திருவருளால் (எல்லாவுயிர்களையும்) ஆள்வானாகிய அவ்விறைவனுக்கு ஆளாயினேன். (அவனுக்கு அடிமை பூண்ட) அப்பொழுதே பெறுதற்கரிய பெருமானாகிய அவனோடு வேறன்றி ஒன்றுபட்டு அவனது திருத்தொண்டில் வழுவாது நிற்பேனாயினேன். உயிர்கள் உய்திபெறும் நன்னெறியாவது அதுவல்லவா ?

அனலைக் கையிலேந்தியவனாகிய அவனது அருளால் ஆள் ஆயினேன் என முடிக்க. மேலைத் திருப்பாடலில் 'ஆளாயினேன்’ என முடித்து, அதன் இறுதியிலுள்ள ஆயினேன் என்ற சொல்லையே இப்பாடலுக்கு முதலாகக் கொண்டமையால் ஆயினேன் என்பதற்கு ஆளாயினேன் எனப் பொருள்