உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
பன்னிரு திருமுறை அருளிய
ஞானாசிரியர்கள் திருப்பெயர்கள்
1திருஞான சம்பந்தர் 2வாகீசர் 3சுந்தரர்
4திருவாதவூரர் மற்றைத்
5திருமாளிகைத் தேவர் 6சேந்தனார் 7கருவூரர்
தெள்ளு 8பூந்துருத்தி நம்பி
வருஞான 9கண்டராதித்தர் 10வேணாட்டடிகள்
வாய்ந்த 11திருவாலியமுதர்
மருவு 12புருடோத்தமர் 13சேதிராயர் 14மூலர்
மன்னு 15திருவாலவாயர்
ஒரு 16காரைக்காலம்மை 17ஐயடிகள் 18சேரமான்
ஒளிர் 19கீரர் 20கல்லாடர் தாம்
ஒண் 21கபிலர் 22பரணர் மெய்யுணர் இளம்
ஓங்கு 23அதிராவடிகளார் [பெருமானோடு
திருமேவு 24பட்டினத்தடிகளொடு 25நம்பியாண்டார்
நம்பி 26சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருள் செய்த
தெய்விகத் தன்மையோரே.
வாழியிவ்வையகம்!
வளர்க நற்சைவம்!!
இதனைக் கண்ணுறும் மெய்யன்பர்கள்
நித்தியபாராயணம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.