பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

யுடையோர் யாரேனும் நூம்மையனுகவருவா ருளதாயின் தாரணிந்த நுமது திருமார்பிற் சாரும்படி அவர்களைப் புகவிடுதல் தீங்கு பயக்கும் என்பதனையறிவீராக,எ-று•

தானே தனிநெஞ்சந் தன்னை யுயக்கொள்வான்
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால்-தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழு
நீணாகத் தானே நினைந்து. (14)

இ-ள். தானோ ஒரு சார்பும் பெறாது தனிமை யுற்ற நெஞ்சம். (என்னெஞ்சமாகிய அது) தன்னை உய்வித்தல் கருதி, தனது உடம்பின் ஒளியுடைய தோற்றத்தால் தானோர் அணிகலனாகப் பொலிந்து தோன்றி மிக்கு எரியும் தீயினியல் அமைந்த கொடிய நஞ்சினைக் கக்கவல்ல நீண்ட நாகத்தினையணிந்தருளிய வனாகிய சிவபெருமானை இடைவிடாது நினைந்து தானே தனக்குரிய பெரிய பாதுகாவலைச் செய்துகொண்டது.எ-று .

"தானே ஆகத்தால் ஒர் பூண் (எனப்) பொலிந்து பொங்கு அழல் சேர் நஞ்சுமிழும் நீள் நாகம்’ என அதன் தோற்றப் பொலிவும் கொடுந்தன்மையும் ஒருங்கு உணர்த்தியவாறு. தனி நெஞ்சமாகிய தான், தன்னே உய்யக்கொள்வான் நீள் நாகத்தானை நினேந்து, தானே பெருஞ்சேமம் செய்யும் என முடிக்க, இதனால் நெஞ்சத்தின் எளிமையும் அதன் அரிய முயற்சியும் உணர்த்தப் பெற்றமையறிக.

நினேந்திருந்து வானவர்கள் நீண் மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து