பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விளங்கினலொத்த திருமிடற்றை யுடையீர், எங்கள் பெருமானுக விளங்குபவரே, இந்த ஒளிபொருந்திய பாடி பின் எண்ணமானது, நுமது ச ைட மு டி யி ல் அணியப்பெற்ற பிறைச்சந்திரளுகிய இதனே யணுகி வந்து பற்றிக் கொள்வதேபோல் தோன்றுகின்றது. (பாம்பினல் வரும்) அ த் தீ ங் கி னே முன்னரே கண்டறிந்து பரிகரிப்பீராக. எ-று ஓர் இரா வந்து நீருடன் இருண்டனயகண்டத்தீர் என்க. இனி, நீர் என்ற சொல் ஆகுபெயராய் மேகத்தையுணர்த் திய தெனக்கொண்டு, 'மேகமானது இராப்பொழுதை யொத்து இ ரு ண் டு தோன்றினு லொத்த கண்டத்தையுடையீர்’ எனப்பொருள் கூறு தலுண்டு. இவ்வாளரவின் சிந்தை, உம் சென்னிப் பிறையாகிய இதனே வந்து கொள்வதே ஒக்கும், அது தெரிந்து காண் மிகுே எனக் கூட்டிப்பொருள் கொள்க. பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே யெந்தையா வுள்ள மிது. (28) இ-ள் பிறைச்சந்திரனையும் க ங் ைக ப் பெ ரு வெள்ளத்தையும் நெருப்புண்டாக உயிர்த்துச் சீறும் பாம்பினேயும்முடிமேலணிந்த இறைவர் எம்பொருட்டுச் சிறிதும் மனமிரங்காராயினும் எமது பொத்தப்படாத நெஞ்சமாகிய இது, எந்தையாராகிய அவர்க்கு ஆட் பட்டோம் என்று பெரு மகிழ்ச்சியுற்றிருக்கும். எ-று அனல் அர வு - அனல் பட உயிர்த்துச் சீறும் பாம்பு. பிறையும் அனலரவும் சூடும் இறைவர்'என்றது