பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சேமம் - பாதுகாவல். சேமம் செய்வதனைச் சேமம் என்ருர், அகப்பூசையில் இறைவனேக் கோடி ஞாயிற் றின் ஒளி திகழும் மின்னல் போலத் தியானித்துப் போற்றும் முறையுண்டென்பர் .ெ ப. ரி .ே ய | ர். அம்மையார் தம் உள்ளத்தும் புறத்தும் எஞ்ஞான்றும் கண்டு மகிழ்ந்த தெய்வக் காட்சியினேயே இத்திருப் பாடலில் உலக மக்களுக்கு அறிவுறுத்தருளிய பெருங் கருனேத்திறம் அறிந்து போற்றத்தகுவதாம். இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணுதே எங்கும் பலிதிரியும் எத் திறமும்-பொங்கிர வில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் ருராய்வோம் நாமவனேக் கானலுற்ற ஞ | ன்று. (25) இ-ள்: எம் இறைவனுகிய சிவபெருமான் தன் பெருமையினைச் சிறிதும் எண்ணுது எவ்விடத்தும் பிச்சையேற்றுத் திரியும் எவ்வகைச் செயல்முறையும் இருள் மிகுந்த நள்ளிரவிலே சுடுகாட்டில் ஆடுவதும் எதன் பொருட்டு என்று நாம் அப்பெருமானேக் கானும் வாய்ப்பு நேர்ந்தபொழுது நேரில் வினவி ஆராய்ந்தறிவோம். (அவனேக் காணவொண்ணுத வண்ணம் பாசத்தாற் பிணிப்புற்றுக் கிடக்கும்) இந் நிலையிலிருந்து நாம் அவ்விறைவன் செய்யும் செயல் களேக் குறித்துச் சொல்லுதற்கு யாதுளது? எ-று. இங்கு பாசத்தாற் பிணிப்புண்டு கிடக்கும் இப் பெத்தநிலையில் அவனேக் காணலுற்ற ஞான்று-அவ னருளாலே அவனேக் கண்டு இன்புறும் முத்திக் காலத்து. பொங்கு இரவு-பேருழிக் காலமாகிய