27
பாதுகாவலைப் பெற்றனையாயினை. இவ்வுயர் நிலை நினக்கு எய்தியது குறித்து மகிழ்வாயாக. எவருடைய எலும்பேயாயினும் இகழாது மாலையாக அணிந்து ஆடுவாராகிய சிவபெருமானுக்குத் தொண்டு செய்தற்குரிய பேரன்பினையே மேன்மேலும் பெருக்கிக்கொள்வாயாக. எ-று.
என்றது, அறிவு வளர்ச்சிக்குப் பாதுகாவலாகிய மக்கடபிறவி வாய்த்த இப்பொழுதே இறைவன் பாற் செலுத்தத்தகும் உயிர்ப்பண்பாகிய அன்பினைவளர்த்து உய்தி பெறுக எனநெஞ்சிற்கு அறிவுறுத்தவாறு. நீயும் உயிராகிய யானேயன்றி எனது நெஞ்சமாகிய நீயும் என்பது கருத்தாகலின் உம்மை இறந்தது தழீயஇய எச்சவும்மை.
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஓருகதிரே போந்தொழுகிற் றொக்குந் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் றன்மார்பி னூல்.
(32)
இ-ள் (எல்லா வுலகத்திற்கும் நிமித்த காரணனாய்) முற்பட்டு விளங்கும் முதல்வனும் முன்னொரு நாளில் முப்புரங்களையும் எரித்து அழித்தவனும் மூவாஇளநலம் வாய்ந்த நெற்றிக்கண்ணனும் ஆகிய சிவபெருமானது திருமார்பில் விளங்கும் பூண நூலின் இயல்பை உற்று நோக்குவோமானால், அதன் தோற்றம், பேரொளிதிகழும் செஞ்சடைமேல் விளங்கும் இளம் பிறையாகிய ஒற்றைக்கலையானது (இளகி) வந்து மார்பில் ஒழுகியது போன்று அமைந்துள்ளது
எ-று.