பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 அ வர் க ள் அறியாவண்ணம் வல்வினைகள்தாம் முந்துற்று அடும் எனப் பொருளுரைக்க. அடுங்கண் டாய் வெண்மதியென் றஞ் சி யிருள் போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றி லுள்ள மறு. (35) இ-ள்: படத்தினேக் கொண்ட அழகியமிடற் றினேயும் பிளந்த வாயினேயும் உடைய பாம்பினே அரைக்கச்சையாகக் கட்டிய இறைவனது நீலமணி போலும் நிறம் வாய்ந்த கண்டத்திற் பொருந்திய நஞ்சக் கறையின் தோற்றம், வெண்மை நிறம் வாய்ந்த சந்திரன் தனது நிலவொளியினுல் தன்னேக் கொல்லும் என்று இருளானது அஞ்சிப் போந்து கண்டத்தினேப் புகலிடமாகக் கொண்டு தங்கியதனே ஒக்கும். எ-று. மணிமிடற்றிலுள்ள மறு, இருள், வெண்மதி அடு மென்று அஞ்சிப் போந்து இடங்கொண்டிருக்கின்றதை ஒக்கும் என முடிக்க. இது தற்குறிப்பேற்ற உவமை. கண்டாய்-அசை. மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகந் தெறுமென்று தேய்ந்துழலும் ஆவா - உறுவான் தளரமீ தோடுமேல் தானதனே யஞ்சி வளருமோ பிள்ளே மதி. (36) இ-ள்: (எல்லேயற்ற பேரருளுக்கு அடையாள மாகத் திகழும்) நஞ்சக்கறை வாய்ந்த திருமிடற்றை