31
யுடையீ, நுமது நீண்ட சடைமேல் அணியப்பெற்ற பிள்ளைத் தன்மை வாய்ந்த இளம் பிறையானது, தன்னருகேயுள்ள பாம்பு தன்னைத் தீண்டி வீருத்துமென்றெண்ணி உடல் தேயந்து வருந்துகின்றது. அந்தோ! அம்மதி மேலும் தளர்ந்து வருந்தும்படி பாம்பு அம்மதிமேற் பொருந்த ஊர்ந்து ஓடுமானால் இளம் பிறையாகிய அது பாம்பினைக் கண்டு பயந்து மீள வளர் தலும் கூடுமோ? வளராதிருத்தல் இயல்புதானே.எ-று.
இறைவனது சடைமேலுள்ள இளம்பிறை மேலும் வளராமல் என்றும் ஒரே தன்மையதா யிருத்தற்கு அம்மையார் புனைந்துரை வகையாற் காரணம் கூறியவாறு. இது தற்குறிப்பேற்ற அணி.
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை — மதியாலே
யென்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
(37)
இ-ள் தாம் பெற்றுள்ள வலிமை காரணமாகத் திருவருளை மதியாது வாழ முற்பட்ட அவுணர்களுடைய பெருமை வாய்ந்த முப்புரங்களையும் அழித்த மதிவளர் சடை முடியனாகிய இறைவனை அறிவினாலும் எலும்போடு கூடிய உடம்பாகிய கருவி கரணங்களாலும் மறவாது வழிபட்டு ஏத்துவார்களானால் அத்தகைய பெருமக்கள் மீண்டும் எலும்போடுகூடிய யாக்கையினை யெய்தி இவ்வுலகிற் பிறக்கமாட்டார்கள் எ-று.
அடலால் மதியா அவுணர் என மாற்றிப்பொருள் கொள்க. இறைவனை மறவாது ஏத்துவோர் பிறவா-