உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அணிந்தருளிய இறைவர்பால் அன்பு வைத்துத் தியானித்துப் போற்றாதாராகிய தீயோர் கூட்டத்தை விட்டு விலகி உய்வாயாக. எ-று.

குறித்தொருவர் கொள்ளாத கொண்டார் எனவும் திங்கட் குறுங்கண்ணி கொண்டார் எனவும் தனித் தனி இயையும். குறித்தொருவர் கொள்ளாத என்றது, பிறரெவரும் குறிக்கொண்டு முயன்று தமது ஆற்றலாற் படைத்துக் கொள்ளமுடியாத என்ற பொருளுடையதாய் இறைவன் கொண்டருளும் அருளுருவின் இயல்பினைப் புலப்படுத்தியவாறுணர்க. உள்ளாதார்- அன்பினால் நினையாததீயோர். ஒருவு- நீங்குவாயாக. இறைவனது அருள்வழி நின்றசீவன் முத்தர்களாகிய அடியார்களைச் சிவனெனவே தெளிந்து முக்கரணங்களாலும் வழிபடுக என்பார், ‘தொண்டர் பாதம் குறித்து வாயாலும் சொல்லித் தொழு’ என்றார். சிவ பத்தரல்லாதாராகிய பிறர் இறைவனது திருவருளை மறக்கும் படி செய்து தீயவழிகளிற் கொண்டுசென்று மலங்களானாகிய பிறவித்துயருள் வீழ்த்துவராதலின் மீளாத் துன்பத்திற்குக் காரணமாகிய அத்தகைய தீயோரது தொடர்பினை அறவே விலகி ஒழுகுக என வற்புறுத்துவார், ‘திங்கட் குறுங்கண்ணி கொண்டார் மாட்டு உள்ளாதார் கூட்டம் ஒருவு’ என அறிவுறுத்தி யருளினார் குறுங்கண்ணி — முடியில் அணியத்தக்கதாகிய சிறியமாலை.

ஒருபா லுலகளந்த மாலவனா மற்றை
யொருபா லுமையவளா மென்றால் — இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து. (41)