பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 கதிர்கள் எங்கும் பரவி விரிய ஒடிக் கலத்தலால் பொன் னுடன் வெள்ளியையும் கயிறுகளாகக் கொண்டு திரித்து முறுக்கி வைத்தாற்போலும் அல்லவா ? எ-று. தன்னேடே யொப்பான்-தனக்கு உவமையில்லா தான் என்பது பொருள். சடை, போலாவே என இயைக்க. போலாவே-போலும் அல்லவா (போலும்). ‘விரிசடைமேல், வெள்ளித் தகடன்ன வெண் பிறைசூடி’ என்பது அப்பர் தேவாரம், சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து புடை மேவித் தாழ்ந்தனவே போலும்-முடிமேல் வலப்பாலக் கோல மதிவைத்தான்றன் பங்கிற் குலப்பாவை நீலக் குழல். (50) இ-ன் தனது திருமுடியின் வலப் பக்கத்திலே அழகிய பிறைத் திங்களையணிந்த சிவபெருமானது இடப்பகத்திலுள்ள அழகிய பாவைபோல்வாராகிய உமையம்மையாரது கரிய கூ ந் த ற் க ற் ைறகள் , இறைவனது சடைமீது விளங்கும் அக்கொன்றை மலரிடத்து உண்டாகிக் கனிந்த கொன்றைக் கனிகள் பக்கத்தில் வந்து பொருந்தித் தாழ்ந்து தொங்குவன வற்றை ஒக்கும். எ-று. குலப்பாவை நீலக்குழல், கொன்றை தருகனிகள் போந்து தாழ்ந்தனவே போலும் என்க. குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத் தெழிலாக வைத்தேக வேண்டா-கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு. (51)