43
கதிர்கள் எங்கும் பரவி விரிய ஓடிக் கலத்தலால் பொன்னுடன் வெள்ளியையும் கயிறுகளாகக் கொண்டு திரித்து முறுக்கி வைத்தாற்போலும் அல்லவா ? எ-று.
தன்னோடே யொப்பான் — தனக்கு உவமையில்லாதான் என்பது பொருள். சடை, போலாவே என இயைக்க.போலாவே—போலும் அல்லவா (போலும்). ‘விரிசடைமேல், வெள்ளித் தகடன்ன வெண் பிறைசூடி’ என்பது அப்பர் தேவாரம்.
சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து
புடை மேவித் தாழ்ந்தனவே போலும் — முடிமேல்
வலப்பாலக் கோல மதிவைத்தான்றன் பங்கிற்
(50)
இ-ள் : தனது திருமுடியின் வலப் பக்கத்திலே அழகிய பிறைத் திங்களையணிந்த சிவபெருமானது இடப்பாகத்திலுள்ள அழகிய பாவைபோல்வாராகிய உமையம்மையாரது கரிய கூந்தற் கற்றைகள், இறைவனது சடைமீது விளங்கும் அக்கொன்றை மலரிடத்து உண்டாகிக் கனிந்த கொன்றைக் கனிகள் பக்கத்தில் வந்து பொருந்தித் தாழ்ந்து தொங்குவனவற்றை ஒக்கும். எ-று.
குலப்பாவை நீலக்குழல், கொன்றை தருக நகனிகள் போந்து தாழ்ந்தனவே போலும் என்க.
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்
தெழிலாக வைத்தேக வேண்டா—கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
(51)