உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இ-ள்: இறைவ (பேரூழிக்காலமாகிய) நள்ளிருட் பொழுதிலே (உலகமெலாம் சங்கரிக்கப்பட்ட) ஈமப் பெருங்காட்டிலே மிக்கெரியும் தீயின் நடுவில் நீ பேய்களுடன் கூடியாடும் அவ்விடத்திலேயும் கூந்தல் தாழ்ந்து பரவிய சிறிய முதுகினையும் திரண்டவளையலையும் உடைய நின்தேவியாகிய உமை நங்கையை நினது ஒரு பாகத்தில் அழகு பொருந்த வைத்துச் செல்லுதல் வேண்டா எ-று.

இருள் செறிந்த நள்ளிரவும், நெருப்புப் பரவிய புறங்காடும், பேய்ச் சுற்றமும் ஆகியவற்றைக் கண்டு உமாதேவியார் அஞ்சுவர் ஆதலின் இறைவனாகிய நீ நள்ளிரவில் பேயுடன் தீயில் நின்றாடும் அவ்விடத்திற்கு உமையை அழைத்துச் செல்லுதல் கூடாது என விலக்குமுகமாக, இறைவனது திருக்கூத்தின் அஞ்சத்தகும் தோற்றத்தினையும் நமது பிறவி நோய் தீர்க்கும் நன்மருந்தாக அத்திருக் கூத்தினைக் கண்டு நம்மனோர்க்கு அருள் சுரந்தருளும் அன்னையாகிய உமா தேவியாரின் அமைதி நிலையையும் குறிப்பினால் உணர வைத்தமை காண்க. பேரிரவு — ஞாயிறு திங்கள் முதலிய யாவும் ஒடுங்கிய பேரூழிக்காலம் ஈமப் பெருங்காடு—மக்கள், தேவர் முதலிய எல்லா வுயிர்களின் உடம்புகளும் வெந்து சாம்பராகிய ஈமப் புறங்காடு.

அங்கண் முழுமதியஞ் செக்க ரகல்வானத்
தெங்கு மினிதெழுந்தா லொவ்வாதே—செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர். 52

இ-ள் சிவந்த கண்களையுடைய திருமாலைத் தனது ஒரு பாகத்தே கொண்டருளிய சிவபெருமானது