உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

சிவந்த சடையின்மேல் நிரல் படத்தொடுத்து அணியப் பெற்ற வெள்ளிய தலைமாலை தோன்றும் அழகிய தோற்றமானது, விரிந்து பரவிய செவ் வானத்திலே அழகிய முழுமதியானது தான் பலவுருக் கொண்டு எல்லாப் பக்கங்களிலும் இனிமையுறத் தோன்றி ஒளி வீசுமானால் அவ்வழகிய தோற்றத்தை ஒக்குமன்றோ? எ-று.

செவ்வானத்தில் தோன்றும் மதியானது, தான் ஒன்றாய் நில்லாது பல வடிவு கொண்டு எல்லாப் பக்கங்களிலும் தோன்றி ஒளி வீசினால் எவ்வாறிருக்குமோ அவ்வழகிய தோற்றத்தை யொத்ததே இறைவன் செஞ்சடைமேல் அணிந்த வெள்ளிய தலை மாலையின் தோற்றம் என்பது கருத்து. ‘எங்கும் இனிதெழுந்தால்’ என்பது அவ்வாறு ஒரு சந்திரன் பல வடிவு கொண்டு எவ்விடத்தும் தோன்றுதலில்லை யென்பதனை குறிப்பான் அறிவுறுத்தி இல்பொருளுவமையாய் நின்றது ஒவ்வாதே -ஒக்குமல்லவா? (ஒக்கும் என்றவாறு). இனி ஏகாரத்தைத் தேற்றமாகக் கொண்டு, ‘செவ்வானத்தில், முழு மதியம் பல கோத்து எழுந்தாலும் இறைவனது செஞ்சடைமேல் சிரமாலை தோன்றும் தோற்றத்திற்குச் சிறிதும் ஒவ்வாது’ எனப் பொருள் கூறுதலும் உண்டு.

சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் பேரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன் முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார். (53)

இ-ள்: பொருதற்கமைந்த வில்லிற் கட்டுதற்குரிய நாணாக வாசுகியென்னும் பாம்பினைக் கொண்டு,