55
சிவபெருமானுடைய திருமேனி, அம்மேனியிற் பூசப்பெற்ற வெண்ணீறு, சிவந்த சடைத் தொகுதி, திருநீலகண்டம் என்பவற்றிற்கு முறையே ஒருநாள் என்ற காலப் பகுதியின் கூறுகளாகவுள்ள காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என்னும் சிறு பொழுதுகளை உவமை கூறியதன் நோக்கம், கால காலனாகிய இறைவனைக் காலத்தின் தோற்றமுடையவனாகவும் எளிதில் வழிபட்டுய்தல் கூடும் என அறிவுறுத்தற் பொருட்டேயாம். ‘நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே’ என வரும் நின்ற திருத்தாண்டகம், காலங் கடந்த முதல்வனைக் காலத்தின் இயல்பில் நின்றருள் செய்பவனாகப் போற்றுதல் காண்க.
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ — மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
‘பை’த்தாடு நும்மார்பிற் பாம்பு.
(66)
இ-ள்: திருமிடற்றில் நஞ்சினை யடக்கிய இறைவரே, நுமது மார்பிடத்தே படம் விரித்தாடும் பாம்பானது, நுமது கண்டத்தை நக்கினமையால் தானும் நஞ்சுடைய தாயிற்றோ? நுமது கண்டத்தினகத்தே யமைந்த குழைத்தமையின் தன்மை வாய்ந்த இருள்போலும் வண்ணத்தினைப் பெற்றுத் தானும் கரிய நிறமுடையதாய்த் தோன்றுகின்றது ஆதலின் எ-று.
ஆல், ஓ என்பன அசை. பைத்து — படம் விரித்து; பை என்ற பெயரடியாகப் பிறந்த வினைச் சொல். பை—படம். இறைவனது திருமார்பில் விளங்கும் பாம்பு அப்பெருமானது திருமிடற்றின் கருமை நிறம்