பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'பாயிரம் இல்லது பனுவலன்று’ என்ற நூலிலக்கணம் குறையாமல் இருக்கவே சிறப்புரை வழங்குகின்றேன். பல்லாண்டுகளாகத் தன் உள்ளப் பெட்டகத்தில் சேர்த்து வைத்த கருத்து மணிகள் மின்னி ஒளிரும் வண்ணம் சிந்திக் கிடக்கின்றன. கற்பவர் சிந்தைக்கு விருந்தாய் மெய்ஞ்ஞான நெறிக்கு வழிகாட்டியாக உள்ளது, அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி யாகும். திருமுறையின் ஒரு பகுதியதாய இவ்வருள் நூல் வாயிலாக மக்கள் மெய்ஞ்ஞானம் பெற்றுய்வார் 密窃霄”好岛。 மணிவிழா அமயத்துச் சிவமணம் கமழ மலரும் இவ்வுரை நூற்கு அறிஞர் என்ற வகையிலோ நண்பர் என்ற முறையிலோ சிறப்புரை வழங்கவும், வாழ்க்கை ஒவியம் வரையவும் எனக்குப் பணித்த பேரரசிரி யர்க்கும், மணிவிழாத் தலைவருக்கும் என் பணிவார்ந்த நன்றி உரியதாகும்.