உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


இ-ள்: (வேண்டுதல் வேண்டாமையிலான் ஆகிய இறைவனது இயல்பினையறியாத)பேதையே, பேய்கள் வாழும் சுடுகாட்டினையே தனக்குரிய ஆடரங்கமாகக் கொண்டு ஆடும் இறைவன், பலநாளும் அன்பினாற் பணிந்து வேண்டினாலன்றி (எல்லா வுயிர்களிடத்தும் தான் கொண்ட நடுவு நிலையினை நீங்கி) வறிதே மனமிரங்கி அருள் புரிவானோ? [உயிர்களது அன்பின் திற முணர்ந்து] மனமிரங்கி அருள்புரிய முற்படுவானானால் (தன்னை வணங்கிய அடியார்களை] எத்தகைய உயர் நிலையில்தான் வைக்கமாட்டான்? எத்தகைய உயர்ந்த வுலகத்தினைத்தான் கொடுத்துக் காத்தருள மாட்டான்? [எல்லாந் தருவன்] எ-று.

பேய்க்காட்டில் அரங்கமா ஆடுவான், பன்னாள் இரந்து பணிந்தால் (அன்றி) எவ்வுயிர்க்கும் வாளா இரங் குமோ எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

‘எவ்வுயிர்க்கும் ஆடுவான்’ என இயைத்து, எல்லாவுயிர்களுக்கும் பாகம் வருவித்து மும்மலப் பிணிப்பைப் போக்குதற் பொருட்டு ஐந்தொழில் திருக்கூத்தினை ஆடியருள்பவனாகிய இறைவன் எனப் பொருள் கொள்க. எனவே இறைவன் புரிந்தருளும் இத்திருக்கூத்து, விருப்பு வெறுப்பின்றி எவ்வுயிர்க்கும் அருள் சுரக்கும் நிலையில் பொதுமையில் நிகழ்வதென்றும், இறைவனது திருவருளைச் சிறப்புரிமையிற் பெறவிரும்புவோர் அப்பெருமானைப் பணிந்து இரந்து வேண்டினால் பேரருளாளனாகிய அவ்விறைவன் வேண்டுவார் வேண்டுவன எல்லாம் ஈந்தருள்வான் என்றும், இங்ஙனம் ஏனையோர்க்கன்றி அன்பினால் தன்னைச் சார்ந்தார்க்கே. தனிமுறையில் எளிவந்து நலஞ்செய்தல் பற்றி அவ்விறைவன் தனக்குரிய நடுவு