68
நிலையிற் சிறிதும் வழுவினானல்லன் என்றும் அம்மையார் திருப்பாடலில் குறிப்பாக உணரவைத்தமையறிக.
‘சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்’
எனவரும் திருப்பாட்டும், இதன் சொல்லையும் பொருளையும் அடியொற்றி,
‘சார்ந்தாரைக் காத்தல் தலைவர்கடனாதல்
சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்’
எனவரும் சிவஞானபோத வெண்பாவும் இங்கு நினைக்கத் தக்கன.
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை யேத்தத்—துணிந் தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற விதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.
(79)
இ-ள்: (எமது) நெஞ்சத்திற்குள்ள பெருமிதவுணர்வுக்குக் காரணம், விரிந்து படர்ந்த சடையினையுடைய எம்பெருமான் திருவடிகளை (மனமொழி மெய்களால்) வணங்கியும் மலர்மாலைகொண்டு புனைந்து போற்றியும் அங்ஙனம் வழிபட்ட மெய்யடியார்களை அம்முதல்வனெனவே தெளிந்து வழிபடும் துணிவு பெற்றும் இவ்வாறு எமது தந்தையாராகிய இறைவர்க்கு அடித்தொண்டு செய்யப்பெற்ற இதுவோ? எ-று.