உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

றாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே யென்றுரைக்கு மின் (82)

இ-ள்: எல்லாப் பக்கங்களிலும் தாழ்ந்து பரவும் ஒளிக் கற்றைகளைடைய செஞ்ஞாயிறும் ஒளியாற் பின்னடையச் செய்யும் தீவண்ணனாகிய சிவபெருமானது விரும்பத்தக்க சிவந்த சடையாகிய மின்னல்கள், மனம் பொருந்தி ஆராய்ந்துணருங்கால் அன்பினால் தன்னைச் சார்ந்த அடியார்களுக்குப் பொன்னின் கொழுந்து போன்று ஒளியும் குளிர்ச்சியும் ஒருங்கு தந்து விளங்கி அன்பரல்லாத புறத்தார்க்கு அனற்கொழுந்தினை யொத்து வெம்மை தருவனவாம் எ-று.

கூர்ந்து நோக்குங்கால், இவை மின்னற் கொடிகளல்ல சிவந்த சடைக் கற்றைகளே என ஐயுற்றுத் தெளியும் வண்ணம் அமைந்தது இறைவனது செஞ்சடையென்பார் ( ‘நேர்ந்துணரின்.... வீழ்சடையேயென் றுரைக்கும் மின்’ என்றார். இறைவனது சடை மின்னலைப் போன்று விளங்கும் தோற்றத்தை, ‘மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை’ எனப் பொன்வண்ணத் தந்தாதி சிறப்பித்துப் போற்றுதல் காணலாம்.

இனி, இத்திருப்பாடலை இறைவன்பாற் காதல் கொண்டு அப்பெருமானை யடையப்பெறாது அவனது திருவுருவத்தை நினைந்து வருந்தும் தன் மகளது ஆற் றாமையை யெண்ணி யிரங்கும் தாயின் கூற்றாகக் கொண்டு, ‘மின்னற்கொடிபோல்வாளாகிய என் மகள், ‘இறைவனது செஞ்சடைக் கற்றைகள் அவனைச் சார்ந்த மகளிர்க்குப் பொற்கொடிபோல் விளங்கிச் சாரப் பெறாத என்போலும் மகளிர்க்கு அனற்கொடி போன்று வெந்துயர் விளைப்பன வாயின’ என்று புலம்பி