பக்கம்:அலிபாபா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விறகுவெட்டியும் நிதிக்குவியலும்

9


நாற்பது திருடர்கள், தத்தம் குதிரைமீது ஏறிக்கொண்டு, தாங்கள் வந்த வழியிலேயே திரும்பச் சென்றுவிட்டார்கள். உடனே அலிபாபா கீழே குதித்துவிடாமல், சிறிது நேரம் மரத்தின்மீதே மறைந்திருந்தான். ஏனெனில், எவனாவது ஒரு திருடன் திடீரென்று திரும்பி, அந்தப் பக்கத்தைச் சுற்றிப்பார்க்க நேர்ந்தால், தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று எண்ணினான்.

திருடர்கள் நெடுந்துாரம் சென்றபிறகு, அவன் கீழே இறங்கினான். திருடர் தலைவன் சொல்லிய மந்திரச் சொற்களைத் தான் சொன்னால் பாறை விலகுமா என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. ஆகவே, அவன் “ஓ ஸிம்ஸிம், திற” என்று உரக்கச் கூவினான். என்ன ஆச்சரியம்! பாறை விலகிப் பாதை திறந்துவிட்டது. அவன் குகையினுள் புகுந்துவிட்டான். குகையின் வாயில் மட்டும் ஓர் ஆள் உயரத்தில் இருந்த போதிலும், உள்ளே பெரிய பண்டகச் சாலை அமைந்திருப்பதை அவன் கண்டான் குகையின் மேலேயிருந்த பாறைகளில் அமைந்திருந்த துவாரங்களின் வழியாக ஒளிக்கதிர்கள் உள்ளே வீசிக்கொண்டிருந்ததால், அங்கு நல்ல வெளிச்சமாயிருந்தது. அங்கே, குவியல் குவியலாகவும், அடுக்கு அடுக்காகவும் சேர்த்து வைக்கப் பட்டிருந்த பொருள்களைக் கண்டவுடன் அலிபாபா பிரமித்துப் போனான். பற்பல வண்ணங்களின் பட்டுத்துகில்கள், பருத்தி ஆடைகள், விலைமதிப்புள்ள இரத்தினக் கம்பளங்கள் முதலியவை தரையிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/11&oldid=511522" இலிருந்து மீள்விக்கப்பட்டது