பக்கம்:அலிபாபா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விறகுவெட்டியும் நிதிக்குவியலும்

11


வைத்திருந்தான். அவனுடைய எண்ணமும் பார்வையும் நாணயங்கள் மீதே பதிந்திருந்தன. அவன் மற்றைப் பொருள்களை நாடவில்லை. ஆகவே, தன் கழுதைகள் இரண்டும் எத்தனை கோணி மூட்டைகளைச் சுமக்க முடியுமோ, அத்தனை நாணய மூட்டைகளை அவன் குகையின் வாயிலண்டையில் கொண்டுபோய் வைத்துக் கொண்டு, மந்திரமொழிகளை கூறினான். பாறை அகன்றதும் அவன், பொன், வெள்ளி, நாணயங்கள் நிறைய மூட்டைகளைக் கழுதை மேல் ஏற்றி, அவை வெளியே தெரியாத முறையில், அவற்றின்மீது சில விறகுச் சுள்ளிகளையும் வைத்துக்கட்டினான். “ஓ எலிம் எலிம், மூடிக் கொள்!” என்று அவன் கூறியதும், பாறை, குகையை மூடிக்கொண்டது. அவன் வழக்கம் போல், கழுதையை ஓட்டிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

கழுதைகள் வீட்டு முற்றத்தினுள் சென்றதும் அவன் வெளிக்கதவை அடைத்துவிட்டு, முதலில் மேலாக இருந்த சுள்ளிகளை இறக்கினான். பின்னர், நாணய மூட்டைகளை ஓரிடத்தில் அடுக்கி வைத்தான். அப்பொழுது அவன் மனைவி, எல்லா மூட்டைகளும் தங்கமும் வெள்ளியுமாயிருப்பதைக் கண்டு அவன் எங்காவது கொள்ளையடித்துக்கொண்டு வந்திருப்பான் என்று கருதினாள். அதனால் அவள் வருத்தமடைந்து, “நமக்கு இந்த ஈனமான தொழில் தகுமா?” என்று அவனைக் கண்டித்துப் பேசத்தொடங்கினாள். அப்பொழுது அலிபாபா, “நான் கொள்ளைக்காரன் ஆக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/13&oldid=511523" இலிருந்து மீள்விக்கப்பட்டது