பக்கம்:அலிபாபா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அலிபாபா


வில்லை! என் கதையை முழுவதும் கேட்டால், நீயே ஆச்சரியப்படுவாய்!” என்று சொல்லி, வனத்திலே நேர்ந்த விஷயங்களை விவரமாக அவளுக்கு எடுத்துக் கூறினான். அத்துடன், பையிலிருந்த தங்க நாணயங்களை அவள் கண்முன்பு அவன் கீழே கொட்டிக் குவியல்களாகக் குவித்து வைத்தான்.

பொற்காசுகளின் ஒளி அவளுடைய கண்களைப் பறித்தது. அவன் கூறிய வரலாறும் அவள் உள்ளத்திற்கு உவப்பாக இருந்தது. அந்நிலையில் அவள் நாணயங்களைக் கையிலெடுத்து எண்னத் தொடங்கினாள். அதைக்கண்ட அலிபாபா, “அடுத்தாற்போல், இவைகளை யாருக்கும் புலப்படாமல் குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்து வைக்கவேண்டும்! அதைப்பற்றி யோசனை செய்யாமல் எண்னத் தொடங்கிவிட்டாயே! இவைகளை எண்ண முடியுமா?” என்று கேட்டான். அவன் மனைவி, “எண்ண முடியாவிட்டாலும், எவ்வளவு நாணயம் இருக்கிறது என்பதற்கு ஒரு கணக்குத் தெரிய வேண்டாவா? அதற்கு வழி செய்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, எழுந்து வெளியே சென்றாள்.

அவள் நேராக மைத்துனன் காஸிமின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே அவன் இல்லாததால், அவன் மனைவியைக் கண்டு, ஒரு தராசும் படிக்கற்களும் வேண்டும் என்று கேட்டாள். அந்த அம்மாள் தராசுகளில் பெரியது வேண்டுமா அல்லது சிறியது போதுமா என்று கேட்டாள். சிறிய தராசையும் கற்களையும் வாங்கிக் கொண்டு, இளையவள் வெளியே சென்றாள். அந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/14&oldid=511524" இலிருந்து மீள்விக்கப்பட்டது