பக்கம்:அலிபாபா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அலிபாபா


தராசுத் தட்டிலிருந்த மெழுகில் ஒரு பொற்காசு ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு காஸிமின் மனைவி உண்மையை உணர்ந்துகொண்டாள். அலிபாபாவின் வீட்டில் பொற்காசுகளையே எடை போட்டிருக்கிறார்கள்! மகா ஏழையான அவனுக்கு தங்க நாணயங்கள் ஏது? அதிலும் தராசில் நிறுத்துப் பார்க்கும்படி, அவ்வளவு அதிகமான காசுகள் எங்கிருந்து வந்தன? இத்தகைய கேள்விகளை அவளே கேட்டுக்கொண்டு, பொறாமையால் உள்ளம் புழுங்கினாள். இரவிலே கனவன் காஸிம் வீட்டுக்கு வந்ததும், அவள் அவனை ஏளனம் செய்து பேசத் தொடங்கினாள்: நீங்கள்தாம் பெரிய பணக்காரர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தம்பி உங்களைவிட அதிகச் செல்வங்களைப் பெற்றிருக்கிறார். இன்று அவருடைய தங்க நாணயங்களை, உங்களைப் போல், கைகளால் எண்ண முடியாது என்று, நம் வீட்டுத் தராசை வாங்கிக்கொண்டுபோய் நிறுத்தார்கள். தராசுத் தட்டில் ஒட்டியிருந்த காசும் இதோ இருக்கிறது, பாருங்கள்!'

காஸிம் காசைக் கண்களால் கண்டு கொண்டான். அதில், பழங்காலத்து மன்னர் ஒருவருடைய முத்திரையும் இருந்தது. தன் தம்பி அத்தகைய காசுகளில் ஆயிரக் கணக்காகப் பெற்றுவிட்டானே என்ற பொறாமையினால், அவனுக்கு இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. பொழுது விடிந்ததும், அவன் எழுந்து சென்று, அலிபாபாவைக் கண்டான். “என்ன தம்பி! வெளிப்பார்வைக்கு நீ ஏழைபோலத் தோன்றிய போதிலும் எடைபோட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/16&oldid=511525" இலிருந்து மீள்விக்கப்பட்டது