பக்கம்:அலிபாபா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2


பொறாமையால் விளைந்த கேடு


டுத்த நாள் காலையில் காஸிம் பத்துக் கோவேறு கழுதைகளை ஒட்டிக்கொண்டு வனத்திற்குச் சென்றான். அங்கே, முன்பு அலிபாபா அமர்ந்திருந்த பெரிய மரத்திற்கு எதிரேயிருந்த பாறையைக் கண்டுகொண்டு, அவன் மிக்க மகிழ்ச்சியுடன், “ஓ ஸிம்ஸிம் திற!” என்று கூவினான். உடனே, குகையை அடைத்திருந்த பாறை விலகிக் கொண்டது. காஸிம் உள்ளே சென்று, சுற்றிலும் குவிந்து கிடந்த பெருநிதிகளைக் கண்டான். அவன் உள்ளே சென்றதும், பாறை தானாகவே வாயிலை அடைத்துக் கொண்டது. அவன் அங்கேயிருந்த செல்வங்களைக் கண்டு வெகுநேரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தான். பிறகு தான் வந்த காரியத்தை எண்ணிக்கொண்டு, அவசர அவசரமாகத் தங்க நாணயங்களை அள்ளிப்போட்டுக் கோணிகளை நிரப்பினான். பத்துக் கழுதைகள் எத்தனை மூட்டைகளைச் சுமக்க முடியுமோ அத்தனையையும் அவன் கட்டி, வாயிற்பக்கமாகத் தூக்கிக்கொண்டு போய் அடுக்கி வைத்துக்கொண்டான். பிறகு வாயிலை அடைத்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/19&oldid=511531" இலிருந்து மீள்விக்கப்பட்டது