பக்கம்:அலிபாபா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறாமையால் விளைந்த கேடு

23



உடனே, அவன் அண்ணனைத் தேடிச்சென்று பார்க்கவேண்டும் என்று அவள் வேண்டிக்கொண்டாள். அவன் அவளைச் சிறிது தேற்றிவிட்டு, தன் கழுதைகளைப் பற்றிக்கொண்டு வனத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். அங்கே, குகை அடியில் சென்றதும், தரையில் புதிதாக உதிரம் சிந்தியிருப்பதைக் கண்டான். அண்ணனையோ, அவன் கொண்டு சென்ற கழுதை களையோ கானவில்லை. ஏதோ பெரிய விபரீதம் விளைந் திருக்கும் என்று அவனுக்கு அப்பொழுதே தோன்றிற்று. உடனே, பாறையை நோக்கி, “ஓ எலிம்ஸிம், திற!” என்று அவன் கூறினான். அது அகன்று வழிவிட்டது. உள்ளே சென்றதும், கதவில் காஸிமின் உடல் நான்கு பாகங்களாகத் தொங்குவதை அவன் கண்டு நடுக்கமடைந்தான். எனினும், தன் கடமையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கருதி, அவன் அந்த அங்கங்களை எடுத்து, இரண்டு துணிகளில் கட்டி, ஒரு கழுதையின் மேலே ஏற்றி வைத்தான். அந்தத் துணிகளுக்கு மேலே காய்ந்த விறகுகளையும் கட்டிவைத்து மூடினான். பிறகு, குகையிலிருந்து தங்க நாணயங்களைக் கோணிகளில் கட்டி, மற்ற இரண்டு கழுதைகளின் மேலே ஏற்றி, அவற்றையும் விறகுகளால் மறைத்து, பாறையை முன்போல் மூடிக்கொள்ளச் செய்துவிட்டு, வனத்திலிருந்து வெளியேறிச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/25&oldid=512484" இலிருந்து மீள்விக்கப்பட்டது