பக்கம்:அலிபாபா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டுக்குச் சென்றதும், அவன் நாணய மூட்டைகளைக் கீழே இறக்கி, மனைவியிடம் ஒப்படைத்து, அவைகளை மண்ணுக்குள் உடனே மறைத்து வைக்கச் சொன்னான். ஆனால், தன் அண்ணனுக்கு நேர்ந்த கதியை அவன் அவளிடம் சொல்லவில்லை. அங்கிருந்து ஒரு கழுதையை மட்டும் ஒட்டிக்கொண்டு அவன் அண்ணன் வீட்டுக்குச் சென்று, வாயிற்கதவை மெதுவாகத் தட்டினான்.

காஸிம் வீட்டில் மார்கியானா என்ற அடிமைப் பெண் ஒருத்தி வேலை பார்த்து வந்தாள். அவள் மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவள். சந்தர்ப்பத்தை அறிந்து எதையும் திறமையுடன் சமாளிப்பதில் அவள் கெட்டிக்காரி. கதவைத் தட்டிய ஓசை கேட்டதும், அவள் ஓடி வந்து, ஓசைப் படாமல் மெதுவாகத் தாழைத் திறந்தாள். அலிபாபா, தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/26&oldid=723067" இலிருந்து மீள்விக்கப்பட்டது