பக்கம்:அலிபாபா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டிலேயே காத்துக் கொண்டிருந்தான். இரண்டாவது நாள் காலையில் பொழுது புலரு முன்பே, மார்க்கியானா, முகத்திரை அணிந்து கொண்டு வெளியே சென்று, பாபா முஸ்தபா என்ற வயோதிகத் தையற்காரனைக் கண்டு பேசினாள். அவனிடம் ஒரு தங்க நாணயத்தை நீட்டினாள். அவன் அன்று தனக்கு வந்த அதிருஷ்டத்தை எண்ணி மகிழ்ந்து, “என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். “நீ உன் கண்களில் ஒரு துணியைக் கட்டி மறைத்துக் கொண்டு என்னுடன் வர வேண்டும். கொஞ்சம் தையல் வேலை இருக்கிறது!” என்று அவள் கூறினாள். அவன் முதலில் இணங்காமல் திகைத்தான். உடனே, மார்கியானா மீண்டும் திர்ஹமை[1] அவனுக்கு அளித்தவுடன், அவன்


  1. திர்ஹம் - தங்க நாணயம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/30&oldid=947000" இலிருந்து மீள்விக்கப்பட்டது