பக்கம்:அலிபாபா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருடர்களின் சூழ்ச்சிகள்

35



ஒரு பிணத்தைத் தைத்துக் கொடுத்தேன்! என் கண் போகிற வழியிலே என் கையிலுள்ள ஊசியும் தவறாமல் செல்லும்! என்று பெருமையுடன் பேசினான். அதைக் கேட்ட திருடன், அந்த ஆசாமியிடமிருந்து மேலும் செய்திகளை அறிய முடியும் என்று கருதி, “நீங்கள் விளையாட்டாகப் பேசுகிறீர்கள் என்றே எண்ணுகிறேன். பினங்களுக்குப் போர்த்தும் துணிகள் தைப்பதே உங்கள் தொழில் என்று சொல்லுகிறீர்களா? துணிக்குப் பதிலாக, ஏதோ பிணத்தையே தைத்ததாகச் சொன்னீர்களே!” என்று கேட்டான்.

முஸ்தபா, “அதைப்பற்றி உமக்குச் சம்பந்தமில்லை. மேற்கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டா!” என்றான். அந்த நிமிடத்திலேயே திருடன் அவன் கையில் ஒரு தங்க நாணயத்தை எடுத்து வைத்தான். தங்கத்தால் ஆகாதது தரணியில் என்ன இருக்கிறது? மேஸ்திரியின் முகம் மலர்ந்தது. திருடன் துணிந்து பேசத் தொடங்கினான். “மேஸ்திரி யாரே! உங்களிடமிருந்து இரகசியம் எதையும் அறிந்துவிட நான் விரும்பவில்லை. ஆனால், நீங்கள் எந்த வீட்டிற்குச்சென்று தைத்திர்கள் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அந்த வீடு எங்கே இருக்கிறது என்று சொன்னால் போதும், அல்லது நீங்களே வந்து காட்டினாலும் நலம்!”

முஸ்தபா, பணத்தை ஆவலோடு சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு பேசலானான்: “எனக்கு அந்த வீடு தெரியாது. அந்த வீட்டிலிருந்த அடிமைப்பெண் ஒருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/37&oldid=512490" இலிருந்து மீள்விக்கப்பட்டது