பக்கம்:அலிபாபா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அலிபாபா


 என்னை அழைத்துச் சென்றாள். இங்கிருந்து சிறிது துரம்வரை நான் கண்களைத் திறந்துகொண்டே சென்றேன். ஆனால், அங்கே ஓரிடத்தில் நிறுத்தி வைத்து, அவள் என் கண்களைக் கட்டிவிட்டாள். அந்த இடத்தை இப்பொழுதும் நான் காட்ட முடியும். அதற்குப் பின்னால் அவள் என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். குறித்த வீடு வந்ததும், என்னை உள்ளே அழைத்துப்போய், ஓர் இருட்டறையில், நான்கு துண்டுகளாகக் கிடந்த ஒரு பிரேதத்தை ஒன்றாகச் சேர்த்துத் தைக்கும்படி சொன்னாள். நான் அப்படியே செய்தேன். அத்துடன் சவத்தைப் போர்த்தும் கபனும் தைத்துக் கொடுத்தேன். அதன்பின், அவள் மறுபடி என் கண்களைக் கட்டி, முதலில் நின்ற இடம்வரை அப்படியே அழைத்துவந்த பிறகுதான் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டாள்!”

திருடன், “சரிதான்! முதலில் உங்களுடைய கண்களைக் கட்டிய இடத்திற்குப் போவோம். அங்கே நானும் உங்களுடைய கண்களைத் துணியால் கட்டி, உங்களை மெதுவாக அழைத்துப் போகிறேன். முன்னால் நடந்து சென்றதை நினைவில் வைத்துக்கொண்டு, குறித்த வீடு வந்துவிட்டதாக உங்களுக்குத் தோன்றும் இடத்தில் நடையை நிறுத்தி விடுங்கள்!” என்று சொல்லி, இரண்டாவது தங்க நாணயம் ஒன்றை அவன் கையிலே வைத்தான். உடனே, முஸ்தபா அவனுடன் கடையை விட்டு வெளியே சென்று, தன் கண்கள் கட்டப்பெற்ற இடத்தைக் காட்டினான். அங்கிருந்து திருடன் அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/38&oldid=512491" இலிருந்து மீள்விக்கப்பட்டது