பக்கம்:அலிபாபா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்களைத துணியால் மறைத்து அழைத்துச் சென்றான். முஸ்தபா அடிகளை எண்ணிக் கொண்டு நிதானமாக நடந்து சென்றான். திடீரென்று ஒரு வீட்டின் முன்பு அவன் நின்று விட்டான். “இதுவரைதான் நான் அவளுடன் வந்தேன்!” என்று அவன் திருடனிடம் கூறினான். அந்த வீடு காஸிமுடைய வீடு. அங்கேதான் இப்பொழுது அவனுடைய தம்பி அலிபாபா வசித்து வந்தான்.

அந்த வீட்டின் கதவில், திருடன் சுண்ணாம்பினால் அடையாளங்கள் செய்து விட்டு, முஸ்தபாவின் கண்களைத் திறந்து வைத்து, “இது யார் வீடு, தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு முஸ்தபா தனக்கு அந்தப் பகுதியில் அதிகப் பழக்கமில்லை என்று சொன்னான். மேற்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/39&oldid=947003" இலிருந்து மீள்விக்கப்பட்டது