பக்கம்:அலிபாபா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுண்ணாம்புக் கட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்திலிருந்த எல்லா வீடுகளின் கதவுகளிலும் அதே மாதிரியான குறிகளைப் போட்டு விட்டாள்.

நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்ற திருடன், தலைவனிடமும், மற்றவர்களிடமும் தான் தெரிந்துகொண்ட செய்தியை அறிவித்தான். அவன் அடையாளம் செய்திருந்த வீட்டுக்கு எல்லோரும் இரவிலே செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப் பெற்றது. இரவிலே திருடர்கள், கூட்டம் கூட்டமாகப் பிரிந்து சென்று நகருக்குள்ளே சந்தித்துக் கொண்டனர். புலன் விசாரித்த திருடனுடைய கையைப் பிடித்துக் கொண்டு தலைவன் முன்னால் நடந்து சென்றான். மற்றவர்களும் தொடர்ந்து சென்றனர். திருடன் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/41&oldid=947027" இலிருந்து மீள்விக்கப்பட்டது