பக்கம்:அலிபாபா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மார்கியானாவின் மதிநுட்பம்

43


வைத்துக்கொன்டான் ஒவ்வொரு திாழியிலும் ஒரு திருடன் ஆயுத பாணியாக அமர்ந்து கொள்ளவும், அவ்வாறு முப்பத்தேழு தாழிகளிலும் அவர்கள் மறைந்திருக்கவும், ஒரு தாழியில் மட்டும் கடுகு எண்ணெயை நிரப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது. மற்றைத் தாழிகளின் வெளிப்புறங்களிலும் சிறிது சிறிது எண்ணெய் பூசப் பட்டது. ஒவ்வொரு கழுதையின் பக்கங்கள் இரண்டிலும் இரண்டு தாழிகள் வீதம் கட்டித் தொங்கவிடப்பட்டன. தலைவன், பின்னர், எல்லாக் கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு நகரத்திற்குச் சென்று, அலிபாபாவின் வீட்டை அடைந்தான். நள்ளிரவில், தான் கை தட்டியவுடன் எல்லாத் திருடர்களும் தாழிகளை விட்டு வெளிவந்து, வீட்டுக்காரனைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று, அவன் எல்லோருக்கும் முன்னதாகவே சொல்லி வைத்திருந்தான்.

அப்பொழுது அலிபாபா. இரவு உணவு அருந்திவிட்டு, வீட்டின் முன்வாயிலில் உலவிக் கொண்டிருந்தான். ஒரு வணிகனைப்போல் உடையணிந்திருந்த திருடர் தலைவன், அவனைக் கண்டு வணக்கம் செய்தான். அலிபாபாவும் பதிலுக்கு வணக்கம் செய்தான். தலைவன், “நான் ஓர் எண்ணெய் வியாபாரி. பல தடவை கிராமத்திலிருந்து இந்த நகருக்கு எண்ணெய் கொண்டுவந்து விற்றிருக் கிறேன். ஆனால், இன்று கழுதைகளை ஒட்டிக்கொண்டு நகருக்குள் வருவதற்குள் இருட்டிவிட்டது. இன்று இரவு மட்டும் நானும் என் கழுதைகளும் தங்குவதற்குத் தாங்கள் இடம் கொடுத்தால் பெரிய உதவியாயிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/45&oldid=512495" இலிருந்து மீள்விக்கப்பட்டது