பக்கம்:அலிபாபா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மார்கியானாவின் மதிநுட்பம்

49



உடலெல்லாம் வெந்து, அந்தத் தாழியிலேயே செத்துக் கிடந்தான். ஒவ்வொரு தாழியிலும் ஒரு பிரேதம் கிடந்தது! இவ்வாறு ஓர் அடிமைப் பெண், தன் புத்தி சாதுரியத் தால், ஓசைப்படாமல், வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரி யாமல், முப்பத்தேழு திருடர்களைப் பரலோகத்திற்கு அனுப்பிவிட்டாள்! எந்தத் தாழியிலும் எவனும் உயிருடன் இல்லையென்று உறுதியான பின், அவள் சமையலறைக்குத் திரும்பி, அண்டாவை இறக்கி விட்டு, மீண்டும் அலிபாபாவுக்காகத் தயாரிக்க வேண்டிய குப்பை அடுப்பில் ஏற்றி வைத்தாள்.

ஒரு மணி நேரம் கழிந்தபின், திருடர் தலைவன் கண்விழித்து, மேலேயிருந்து படிக்கட்டில் இறங்கி நின்றுகொண்டு, ஒருமுறை தன் கைகளைக் கொட்டினான். பதிலே இல்லை. சிறிது நேரத்திற்குப்பின் அவன் இரண்டாம் முறை கொட்டி, உரக்கக் கூவினான். அப்பொழுதும் பதில் வரவில்லை. அவன் மூன்றாம் முறையாகக் கைகளைக் கொட்டிக் கூவியும் பார்த்தான். மறுமொழியில்லை. எனவே, அவன் கீழே இறங்கி, நேரே கொட்டகைக்குச் சென்றான். ‘எல்லோரும் உறங்கிவிட்டனர் போலிருக்கிறது! எடுத்த காரியத்தை முடிக்க இதுவே தருணம்! ஒவ்வொரு வரையும் தட்டி எழுப்பியாவது உடனே அழைத்து வர வேண்டும்!’ என்று அவன் தீர்மானித்தான்.

முன்னணியில் இருந்த தாழி அருகில் அவன் சென்றதும், காய்ந்த எண்ணெயின் வாடையும், வெந்த சதையின் வாடையும் அவன் முகத்தில் கலந்து வீசின. அவன் தாழியைத் தொட்டுப் பார்த்தான். அது கொதிப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/51&oldid=512500" இலிருந்து மீள்விக்கப்பட்டது